கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் தீ பரவிவருகின்றது.
இன்று முற்பகல் 10 மணியளவில் குறித்த தொழிற்சாலையில் தீ பரவியதாக நீர்கொழும்பு தீயணைப்பு சேவைகள் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்காக நான்கு தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இரண்டு மாடிகளைக் கொண்ட தொழிற்சாலை ஒன்றிலேயே தீ பரவிவருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
