சீனாவின் சங்காய் நகரில் அமைந்துள்ள இவ்வீடானது தலைகீழாக (கூரை கீழாகவும், அத்திவாரம் மேலே உள்ளவாறும்) அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வீட்டின் விசேடம் என்னவெனின் வீட்டின் அறைகள், பொருட்கள் அனைத்துமே தலைகீழாகவே அமைக்கப்பட்டுள்ளன.
தளபாடங்கள், அழகு பொருட்கள், பொம்மைகள் என அனைத்துமே தலைகீழாகவே காட்சியளிக்கின்றன.
இவ்வீட்டினை பார்வையிட தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் வந்து செல்வதாக சீன செய்திகள் தெரிவிக்கின்றன.
