காலியில் இருந்து பயணித்த எண்ணெய் ஏற்றிச் செல்லும் ரயிலொன்றும், அளுத்கம ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் பெட்டிகளுடன் மோதியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவிக்கின்றது.
இன்று அதிகாலை 12.50 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயிலொன்று சேதமடைந்துள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுக் பிரிவு குறிப்பிடுகின்றது.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் ரயிலில் பயணிகள் எவரும் இருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான ரயிலை, தண்டவாளத்தில் இருந்து அகற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டுகின்றது.
இந்த விபத்தினால் மாத்தறை – அளுத்கமவுக்கு இடையிலான ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்படலாம் என ரயில்வே திணைக்கள பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.
