Advertisement

Main Ad

இன்றும் நாடுமுழுவதும் மழையுடன் கூடிய காலநிலை : Video


நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் குறிப்பிட்டுள்ளது.

குருநாகல் கல்கமுவ பிரதேசத்தில் ஒரு மரணம் சம்பவித்துள்ளதாகவும், ஹப்புத்தளை பகுதியில் ஒரு மரணமும் பதிவாகிள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய  நிலையத்தின் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, நவகத்தே கம அந்தரவௌ பெருக்கெடுத்ததன் காரணமாக, பிரதேசத்தின் 30 குடும்பங்களைச் சேர்ந்த 94யிற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, நாட்டில் காணப்படும் 74 பிரதான நீர் தேக்கங்களில்  இரண்டு நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 நீர் தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கும் நிலையை அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, இன்றைய தினமும் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் எனவும் காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.