இந்த சம்பவம் தொடர்பான CCTV பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
குறித்த கர்ப்பிணிப் பெண்ணை மோதிய வாகனத்தினை உயிரிழந்த பெண்ணின் கணவர் வழங்கிய வாகன இலகத்தினைக் கொண்டு அடையாளம் கண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இதனை அடிப்படையாகக் கொண்டு விபத்தினை ஏற்படுத்திய சாரதியும் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த நபர் முன்னணி தனியார் வைத்தியசாலை ஒன்றின் பணிப்பாளர் என்றும் அவர் தற்போது நாட்டில் இருந்து தப்பித்து சிங்கப்பூரிற்கு சென்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
யாராவது ஒருவர் எவரையேனும் மோதிய பின்னர் தப்பித்துச் செல்லலாம் என நினைத்தால் அது இயலாத காரியம் என தெரிவிக்கும் பொலிஸார் தற்போது வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கமராக்கள் மூலம் அவர்கள் இலகுவில் அடையாளம் காணப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
