நாவிதன்வெளி பிரதேசத்தில் நேற்று மாலை வீசிய மினி சூறாவளியினால் வீடுகள்,
கடைகள், குடிசைகள், தோட்டங்கள் என்பவற்றிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளது.
பலத்த காற்றுடன் கூடிய மழையினால் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதினால்
வீடுகளின் கூரைகள் சேதம் அடைந்துள்ளதுடன் பல உடைமைகளுக்கு சேதங்கள்
ஏற்பட்டுள்ளன.
இம்மினி சூறாவளியினால் வீரத்திடல், சவளக்கடை, மத்திய முகாம் ஆகிய பிரதேசங்களில் சேதங்கள் ஏற்பட்டுள்ளன.






