Advertisement

Main Ad

கோஹ்லி, புஜாராவின் பங்கு முக்கியம்: பீட்டர்சன் கருத்து

இங்கிலாந்துக்கெதிரான தொடரில் இந்திய அணியின் கோஹ்லி, புஜாரா ஆகியோர் முக்கியப்பங்கு வகிப்பவர்கள் என இங்கிலாந்து அணி முன்னாள் வீரர் பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2011ல் இங்கிலாந்து சென்ற இந்திய அணி, டெஸ்ட் தொடரை 0–4 என இந்தியா பறிகொடுத்தது.இதன் முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் கெவின் பீட்டர்சன் இரட்டை சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில், இந்தியா மீண்டும் இங்கிலாந்து சென்று 5 டெஸ்ட், 5 ஒரு நாள், 1 டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது.
இது குறித்து பீட்டர்சன் கூறுகையில், இந்திய அணியின் துடுப்பாட்டம் வியக்கத்தக்க முறையில் உள்ளது. எனவே இவர்கள் மோதவுள்ள தொடர் சிறப்பாக அமையும்.
கடந்த முறை டிராவிட் சிறப்பான பங்கை அளித்தார். ஆனால் தற்போது, இந்திய அணியில் கோஹ்லி, புஜாரா, முரளி விஜய் உள்ளிட்டோர் ஓட்டங்கள் சேர்க்கும் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் என கூறியுள்ளார்.