
ஏழாவது ஐ.பி.எல். தொடரில் இதுவரை அதிக சிக்சர் அடித்த வீரர்கள் வரிசையில் சென்னையின் ஸ்மித் (24 சிக்சர்) முதலிடத்திலுள்ளார். அடுத்த இடத்தில் பஞ்சாப்பின் மெக்ஸ்வெல் ( 19 சிக்சர்) உள்ளார். அதிக வெற்றி ; டில்லி அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் விளையாடிய 5 போட்டிகளில் 4 ஆவது வெற்றியை ( ஒரு தோல்வி ), சென்னை அணி நேற்று முன்தினம் பதிவுசெய்தது. சென்னை அணிக்கு எதிராக மூன்றாவது முறையாக 175 அல்லது அதற்கும் மேல் ஓட்டங்கள் எடுத்தும் தோற்றது. இவை அனைத்தும் டில்லி சொந்த மண்ணில் நடந்தது சோகம். ஜடேஜா "50' ; நேற்று முன்தினம் முரளிவிஜயை அவுட்டாக்கிய சென்னை அணியின் ரவிந்திர ஜடேஜா ஐ.பி.எல். அரங்கில் 50 ஆவது விக்கெட்டைப் பதிவு செய்தார். இதுவரை 85 போட்டிகளில் 168.2 ஓவர்கள் பந்து வீசி இந்த இலக்கை எட்டியுள்ளார். முதல் மூன்று இடங்களில் மும்பையின் மலிங்கா (112), ஐதராபாத்தின் அமித் மிஸ்ரா (99), கொல்கத்தாவின் வினய் குமார் (90) உள்ளனர்