Advertisement

Main Ad

போலி உலகக் கிண்ணங்கள்

2014ஆம் ஆண்டில் எந்த அணி உலகக் கிண்ணத்தை ஏந்தும் என்று உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்திருக்கும் நிலையில் போலி உலகக் கிண்ணங்கள் ஆயிரக் கணக்கில் அகப்பட்டிருக்கின்றன.

நம்ம நாட்டில் இல்லை.
நமக்கு ரொம்ப நெருங்கிய உறவு நாடாக மாறிக்கொண்டிருக்கும் சீனாவில்.

உலகின் எந்த ஒரிஜினலுக்கும் சொல்லி வைத்த மாதிரி அச்சொட்டாக அப்படியே டுப்ளிகேட் தயார் செய்வதில் விண்ணர்களான சீனர் உலகக் கிண்ணத்தையும் சீசன் பார்த்து தயார் செய்து வைத்திருக்கிறார்கள்.

சீனாவின் Zhejiang மாநிலத்தின் Yiwu என்ற நகரத்தில் உள்ள ஒரு தொழிற்சாலையின் களஞ்சியத்தில் தயாரித்து கால்பந்து மோகம் முற்றிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கு தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த இவ்வாறான 1020 போலி உலகக்கிண்ணங்கள் சீன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவற்றில் ஒரு தொகுதி லிபியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட இருந்தனவாம்.
ஆனால் லிபியா இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறவில்லை.

கிரிக்கெட் உலகக் கிண்ணங்களுக்கு குறைவில்லாத நம்ம நாடு எத்தனை போலி கால்பந்து உலகக் கிண்ணங்களுக்கு ஓர்டர் கொடுத்திருந்ததோ?

இதிலே ஆச்சரியப்படும் விதமாக போலி உலகக் கிண்ணங்களில் உண்மையான உலகக் கிண்ணத்தில் இருக்கும் அத்தனை தரவுகளும் அச்சொட்டாக அப்படியே இருந்தனவாம். ஒரு கீறல் உட்பட..



போலி செய்தாலும் போக்கிரித்தனம் செய்தாலும் ஒரு நேர்த்தியாகத் தான் செய்கிறார்கள்.