Advertisement

Main Ad

களுவாஞ்சிக்குடியில் பொல்லால் தாக்கி பெண் கொலை


களுவாஞ்சிக்குடியில் பொல்லால் தாக்கி பெண் கொலைமட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடியில் பெண்ணொருவர் பொல்லால் தாக்கப்பட்டு, கொலைசெய்யப்பட்டுள்ளார்.

களுவாஞ்சிக்குடி, பளுகாமம் – வீரச்சேனை பகுயில் நேற்று மாலை இந்த கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சடலம் மீதான பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ளது.
பெண்ணின் கொலை தொடர்பில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கொலைச் சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை கொண்டு வருகின்றனர்.