ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நீதி அமைச்சருமான ரவுப் ஹக்கீம்
இன்று வியாழக்கிழமை (22) மாலை, பாராளுமன்றத்தில் உள்ள தமது அலுவலகத்த்தில்
கட்சியின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களை அதன் நகர பிதா நிசாம்
காரியப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான ஏச்.எம்.எம்.ஹரீஸ், பைசல் காசிம்,
எம். எஸ். தவ்பீக், எம்.எஸ்.எம்.அஸ்லம் மாகாண சபை உறுப்பினர் எ.எம் ஜமீல்
ஆகியோருடன் சந்தித்து நீண்ட நேரம் கலந்துரையாடினார்.
கல்முனை மாநகர சபை பிரதி மேயர் நியமனம் பற்றி ஆராயப்படுமென ஊகங்கள் நிலவிய
போதிலும்,ஏனைய விடயங்கள் பற்றியே முக்கியமாக கருத்துக்கள்
தெரிவிக்கப்பட்டன.
