டப்லினில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 219 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
220 ஓட்டங்கள் என்ற வெற்றியிலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 39.5 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வி அடைந்தது.
போட்டியின் சிறப்பாட்டகாரராக அஜந்த மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.
இதன்பிரகாரம் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற ஆட்டக்கணக்கில் இலங்கை அணி முன்னிலை பெற்றுள்ளது.
இந்த தொடரில் சிரேஷ்ட வீரர்களான குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன மற்றும் லசித் மாலிங்க ஆகியோர் விளையாடவில்லை என்பதும் குறிப்பிடதக்கது.
