புத்த பெருமானையும் பௌத்த சமயத்தையும் நிந்தனை செய்தார் என்ற
குற்றச்சாட்டில் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டிருக்கின்ற ஸ்ரீ லங்கா
தவ்ஹீத் அமைப்பின் செயலாளர் ராசீக் தன் மீது சுமத்தப்பட்டுள்ள
குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்டிருப்பதுடன் இதற்காக தான் மா நாயக்க
தேரர்களிடம் மன்னிப்புக் கோர இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

அத்துடன் அகில இலங்கை தவ்ஹீத் அமைபின் செயலாளர் அப்துல் ராசிக் சார்பில்
இன்று 20-05-2014 நீதி மன்றத்தில் ஆஜராகிய சட்டத்தரணிகளும் தனது
வாடிக்கையாளர் இது விடயத்தில் தவறிழைத்திருப்பதாக ஏற்றுக் கொள்வதாகத்
தெரிவித்திருப்பதுடன், அவர் அதற்காக பௌத்த மா நயக்க தேர்களிடம்
மன்னிப்புக்கோர இருப்பதாகவும் இன்று இந்த வழக்கு கொழும்பு நீதி மன்றத்தில்
எடுத்துக் கொள்ளப்பட்டபோது தெரிவித்திருக்கின்றார்கள். எனவே இதன் பின்னர்
இது தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய வீடியே ஒளி,ஒலி நாடக்களை
ஊடகங்களிலோ இணையத் தளங்களிலோ ஒலிபரப்பக் கூடாது என்றும்
சொல்லப்பட்டிருக்கின்றது.