Advertisement

Main Ad

டோக்கியோவில் சக்தி வாய்ந்த நில அதிர்வு

 
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இன்று காலை சக்தி வாய்ந்த நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக பல கட்டடங்கள் அதிர்வுக்குள்ளானதாக உள்ளுர் செய்திகள் தெரிவிக்கின்றன.

எனினும் இந்த அதிர்வு காரணமாக ஆழிப்பேரலை ஏற்பட வாய்ப்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 5.30  அளவில் மத்திய டோக்கியோவின் தென்மேற்கில் உள்ள தீவுகளில் இந்த நில அதிர்வின் மையப்பகுதி அமைந்திருந்ததாக அந்த நாட்டு வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.

இந்த நிலையில், அதிர்வு காரணமாக  இழப்பீடுகள் எதுவும் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை.

இதனிடையே, இந்த நில அதிர்வு காரணமாக புகுஷிமாவில் உள்ள அணு உலைக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.