சுன்னாகம் மேற்கு மூர்த்தியான் கூடல் பகுதியில் உள்ள வயல் கிணற்றில் இருந்து சடலம் ஒன்று நேற்று மதியம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. 
வீதியால் சென்றவர்கள்
துர்நாற்றம் வீசுவதைக் கண்டு அருகில் உள்ள கிணற்றை எட்டிப் பார்த்த வேளை
சடலம் ஒன்று கிணற்றில் மிதப்பதைக் கண்டு கிராம அலுவலரிடம் முறையிட்டனர்.
அதைத் தொடர்ந்து சுன்னாகம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து
சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்க் கொண்டுள்ளார்கள்.
இது சம்பந்தமாக
சுன்னாகம் பொலிஸார் மல்லாகம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்கள். சாரத்துடன்
காணப்படும் சடலம் சுமார் 65 வயது மதிக்கத்தக்கவருடையது எனவும் கிணற்றில்
இரண்டு மூன்று நாட்களுக்கு முன்னர் வீழ்ந்து இருக்கலாம் எனவும்
கூறப்படுகிறது.
