(படுவான் பாலகன்) உக்டா நிறுவனமும் வேள்ட்விஷன் நிறுவனமும் இணைந்து
ம.தெ.மேற்கு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 15 பாலர் பாடசாலை மாணவர்களுக்கான
விளையாட்டு விழா நேற்று.பி.ப.02.30மணிக்கு மகிழடித்தீவு பொது விளையாட்டு
மைதானத்தில் உக்டா நிறுவனத்தின் தலைவர்.திரு.அ.கருணாகரன் அவர்களின்
தலைமையில் மிகவும் சிறப்பான முறையில் இடம்பெற்றது.இதன் போது தேசியக்கொடி, வேள்ட்விஷன் நிறுவனக் கொடி, உக்டா நிறுவன கொடி மற்றும் 15பாலர் பாடசாலைகளின் கொடிகளும் ஏற்றப்பட்டதுடன் சின்னஞ் சிறார்களின் அணிநடை மரியாதை, ஒலிம்பிக் தீபம் ஏற்றல், உடற்பயிற்சி கண்காட்சி, வினோத உடை, தாரா நடை, முயல் பாய்ச்சல், விலங்கு அஞ்சல், பொய்க்கால் நடை,சமனிலை ஓட்டம், மரக்கறி தெரிதல்,மிட்டாய் ஓட்டம் என பல்வேறு பட்ட விளையாட்டுக்கள் செல்லக்குதூகலமாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வலயக்கல்விப் பணிப்பாளர் திரு.க.சத்தியநாதன், திருத் தாந்தோன்றீஸ்வரர் ஆலய பிரதம குரு சிவஸ்ரீ வ.சோதிலிங்க குருக்கள், அனர்த்த முகாமைத்துவ மாவட்ட உதவிப்பணிப்பாளர் எஸ்.இன்பராஜா, வேள்ட்விஷன் நிறுவன பட்டிப்பளை பிராந்திய வேலைத்திட்ட முகாமையாளர்.திரு.அனுராஜ், சி.விவேகானந்தராசா மகிழடித்தீவு வைத்தியசாலை வைத்தியர், திரு.நா.கிருஸ்ணபிள்ளை செயலாளர் ம.தெ.மே.பிரதேச சபை, திரு.ந.தயாசீலன் கோட்டக்கல்விப்பணிப்பாளர் ம.தெ.மேற்கு, திரு.எஸ்.கணேஸ் உதவிக்கல்விப்பணிப்பாளர் பாலர் பாடசாலை மட்டக்களப்பு மேற்கு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் உதவி அத்தியட்சகர் திரு துசார, வேள்ட்விஷன் நிறுவன கல்வித்திட்ட இணைப்பாளர்.இ.அமுதராஜ், உக்டா நிறுவன ஆலோசகர்கள் திரு.பொ.நேசதுரை(அதிபர்), திரு.க.தியாகராசா(அதிபர்) நீதிதேவன் நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு உத்தியோகத்தர், கு.உமாறமணன் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி உத்தியோகதர் மற்றும் பிரதேச கிராம சேவை உத்தியோகத்தர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இதன் போது 15 இல்லங்கள் அமைக்கப்பட்டு இதில் 1தொடக்கம் 6ம் இடங்கள் வரை பெற்ற இல்லங்களுக்கும், அனைத்து பாலர் பாடசாலை மாணவர்களுக்கும் பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.





















