இந்த தொடரில் இலங்கை மற்றும் அயர்லாந்து அணியினர் இரண்டு ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது
முதலாவது ஒருநாள் போட்டி டப்ளினில் இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3.30 அளவில் ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை அணி பல முக்கிய மாற்றங்களோடு இந்தத் தொடரில் பங்கேற்றகின்றமை குறிப்பிடத்தக்கது.
போல் பாப்ரேஸ் இலங்கை அணியின் பயிற்றுனர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, இலங்கை அணியின் புதிய பிரதான பயிற்றுனராக மாவன் அத்தபத்து செயற்படவுள்ளார்.
மாவன் அத்தபத்து பிரதான பயிற்றுவிப்பாளராக செயற்படும் முதல் தொடர் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை அணியின் உபதலைவராக லஹிரு திரிமான்ன பங்கேற்கும் முதல் தொடர் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.
அயர்லாந்து கிரிக்கெட் அணியை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பதோடு சிறந்த அணியுடன் இன்றைய போட்டியில் களமிறங்க உள்ளதாக இலங்கை அணித் தலைவர் அஞ்சலொ மெத்யூஸ் குறிப்பிட்டுள்ளார்.
