Advertisement

Main Ad

அச்சுவேலியில் பயங்கரம் – மூவர் வெட்டிக் கொலை – பிந்திய தகவல்கள் இணைப்பு


அச்சுவேலியில் பயங்கரக் கொலைச் சம்பவம் ஒன்று இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்றுள்ளது. அதிகாலை வேளையில் வாள்களால் வெட்டப்பட்டு மூவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தெரிய வருவதாவது
அச்சுவேலி J/212 கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் வசித்து குடும்பம் ஒன்றை வாளால் வெட்டி கொலை செய்துள்ளனர். இதில் அக்குடும்பத்தை சேர்ந்த யசோதரன் மதுசா( வயது 27), நிற்குணந்தன் சுபாங்கன் (வயது 19)அத்துடன் மதுசாவின் தாயாரும் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இவா்களுடன் நிற்குணாந்தன் தர்மிகா (வயது25), யசோதரன் வேலன் வயது (30) ஆகியோர்
படுகாயத்துக்குள்ளாகியுள்ளானர்.
இன்று அதிகாலை இடம்பெற்ற இக் கொலை சம்பவமானது குடும்பத் தகறாறின் விளைவாக ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.  இந்த கொலைச்சம்பவம் யாழ்ப்பாணத்தை பயத்தில் உலுக்கி எடுத்துள்ளது. இரவு காவல் கடமையில் ஈடுபடும் பொலிசாரின் அசமந்தப்போக்கில் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் இணைப்பு
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், சம்பவத்துக்குப் பயன்படுத்தப்பட்டது என்று நம்பப்படும் ஓட்டோ ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
4d90f4c37a330d4b5fbb57652898b87c 7c92629ac4bf20106508a58a07af7570