Advertisement

Main Ad

மட்டக்களப்பு -கொழும்பு ரயிலில் மோதி இரண்டு யானைகள் பலி

கொழும்பிலிருந்து மட்டக்களப்பை நோக்கி பயணித்த ரயிலில் மோதி இன்று அதிகாலை இரண்டு யானைகள் உயிரிழந்துள்ளன.


புனாணை மற்றும் மயிலந்தன்னை ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று அதிகாலை நான்கு மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் குறிப்பிட்டுள்ளது.

உயிரிழந்து இரண்டு யானைகளும் 25 க்கும் 30 வயதிற்கும் உட்பட்டவை என வனஜீவராசிகள் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட காரியாலயத்தின்  சுற்றுவட்ட உதவியாளர் தெரிவித்தார்.