சாய்ந்தமருது பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அண்மையில் தெரிவான கிராம சேவை
உத்தியோகத்தர்களுக்கான கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட
இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் அவர்களின் ஏற்பாட்டில் நிர்வாக கிராம சேவக
உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.நளீர் தலைமையில் சாய்ந்தமருது பிரதேச செயலக
கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கரையோரம் பேணல் சம்மந்தமான பயிற்சி பட்டறைக்கு கரையோர பாதுகாப்பு
திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் எம்.ஐ.எம்.ஜசூர் பிரதம வளவாளராக
பங்கு கொண்டு பிராந்தியத்தின் கரையோரத்தை பேணுவதன் அவசியம் பற்றியும்
கரையோரம் பேணல் தொடர்பில் திருத்தப்பட்ட சட்டம் சம்மந்தமாகவும் குறித்த
சட்டத்தை அமுல் படுத்துவதில் கிராம சேவகர்களின் பங்கு சம்மந்தமாகவும்
விரிவான விளக்கங்களை வழங்கினார்.
