சில காலம் தமிழ் சினிமாவில் தன்னுடைய கவர்ச்சி நடிப்பால் கொடி கட்டி பறந்த நமீதாவுக்கு யார் கண் பட்டதோ என்று தெரியவில்லை பட வாய்ப்புகள் வராமல் வெட்டியாக இருந்து வருகிறார்.
அதனால் விளம்பர படங்களிலும், கடை திறப்பு விழாக்களிலும் மட்டுமே நானும் இருக்கிறேன் என்று தலை காட்டி வருகிறார்.
இந்நிலையில் வெட்டியாக இருந்து வரும் நமீதா அதிக பொருட் செலவில் ஒரு நிகழ்ச்சி நடத்த உள்ளாராம்.
இதை கேட்டதும் நமீதா ரசிகர் மன்றம் நடத்த போகிறாரா? தனிக்கட்சி துவங்க போகிறாரா? என்று பல கேள்விகள் நம்முள் எழும்.
ஆனால் அதெல்லாம் இல்லங்க… கடந்த ஓராண்டாக பொழுது போக்குக்காக இல்லாமல் நிஜமாகவே குத்துச் சண்டை கற்று வருகிறாராம் நமீதா.
இப்போது யாராவது நமீதாவை தாக்கினால் அவர்களின் முதுகெலும்பை முறித்துவிடும் அளவுக்கு கலையில் தேர்ச்சி பெற்றுவிட்டாராம்.
இதனை தனது ரசிகர்களுக்கு தெரிவிக்கும் வகையில் தன் சொந்த செலவில் சென்னையில் ஒரு பெரிய குத்து சண்டை போட்டியை நடத்தப் போகிறார். இதில் கலந்து கொண்டு நமீதாவை வெல்கிறவர்களுக்கு ஏராளமான பரிசுகளும் காத்திருக்கிறதாம்.
