கல்முனையில் 'ஜனாதிபதி
புலமைப்பரிசில்'; வழங்கும்
நிகழ்வு!
கல்முனை வலயக் கல்வி அலுவலகத்திற்குட்பட்ட பாடசாலைகளில் க.பொ.த உயர்தரத்தில்
கல்வி கற்கும் வறிய மாணவர்களுக்கு மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் ஜனாதிபதி
நிதியத்தினால் 'ஜனாதிபதி
புலமைப்பரிசில்'; வழங்கும் நிகழ்வு
நேற்று கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி சேர் றாசிக் பரீட் மண்டபத்தில்
இடம்பெற்றது.
கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல் தலைமையில் இடம்பெற்ற
இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாகக்
கலந்து கொண்டு இப்புலமைப்பரிசில் நிதியினை மாணவர்களுக்கு வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.மயில்வாகனம் உள்ளிட்ட உதவிக்
கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப்
பணிப்பாளர்கள், பாடசாலைகளின்
அதிபர்கள், ஆசிரியர்கள்,
மாணவர்கள், பொற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் 105 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில வழங்கப்பட்டதுடன் மாணவிகளின் கலை
இந்நிகழ்வில் 105 தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு இப்புலமைப்பரிசில வழங்கப்பட்டதுடன் மாணவிகளின் கலை
நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.






