
தொடர்ந்தும் தொழில்நுட்ப பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வரும் நுரைச்சோலை அனல் மின்சார நிலையத்தில் மற்றும் ஒரு தொழில்நுட்ப பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
300 மெவோட்ஸ் உற்பத்தி திறனைக்கொண்ட இந்த நிலையத்தில் சூடாக்கியில் ஏற்பட்டுள்ள கசிவு காரணமாக இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இந்த தொழில்நுட்ப பிரச்சினை கடந்த ஜனவரி 25 ஆம் திகதிக்கு பின்னர்
இரண்டாவது தடவையாக ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திருத்தும் பணிகள் சீன
மெக்கானிக்கல் எஞ்சினியரிங் கோப்பரேசனிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மின்சார நிலையம் சீனாவின் அனுசரனையுடன் இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
