ஆர்ப்பாட்டத்தை தவிர்த்து சாத்வீக
முறைகளை கையாளுமாறு லண்டன் ஆர்ப்பாட்டம் தொடர்பாக அகில இலங்கை ஜம்இயத்துல்
உலமா மற்றும் மற்றும் முஸ்லிம் கவுன்ஸில் ஆகிய அமைப்புக்கள் ஊடக அறிக்கை
ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது.
ஐக்கிய இராஜியத்தில் இருக்கும் இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு!
லண்டனிலுள்ள
இலங்கை தூதரகத்திற்கு முன்னாள் இலங்கை முஸ்லிம்கள் குழுவொன்று
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை
மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்காவிற்கு தகவல் கிடைத்துள்ளது.
இவ்
ஆர்ப்பாட்டம் ஐக்கிய இராஜ்யத்தின் லண்டன் நகரிலுள்ள இலங்கை தூதரகத்திற்கு
முன்னாள் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் திகதி அன்று நடாத்தப்படவுள்ளதாக தகவல்
கிடைத்துள்ளது.
அகில
இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை மற்றும் முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா
இணைத்து லண்டனிலுள்ள இலங்கை முஸ்லிம்களுக்கு விடுக்கும் செய்தி
என்னவெனில். நாம் எந்தவொரு ஆர்ப்பட்டத்தையும் தூண்டவோ, அல்லது வேறெந்த
வகையிலும் அவ்வாறானதொரு ஆர்ப்பாட்டத்திற்கு எமது ஆதரவினை வழங்கவோ இல்லை
என்பதாகும்.
இவ்வாறானதொரு
சந்தர்ப்பத்தில் ஆர்ப்பாட்டமொன்றை நடாத்துவது பொருத்தமற்றது என்று நாம்
கருதும் அதேவேளை, தூதுவரை சந்தித்து தமது நிலைப்பாட்டை அவருக்கு
தெளிவுபடுத்துமாறும் ஏற்பாட்டாளர்களை நாம் வேண்டிகொள்கிறோம்
