Advertisement

Main Ad

சாய்ந்தமருதில் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் தொடர்பான விசேட சொற்பொழிவும் நூல் விநியோகமும்!


-எம்.வை.அமீர்-
முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் தொடர்பிலான “கற்றுக் கொள்ளலலும் பற்றுக் கொள்ளலலும்” எனும் தலைப்பிலான விசேட சொற்பொழிவும் நபியவர்களின் ஸீரா தொடர்பான நூல் தொகுதி விநியோகமும் நேற்று இரவு சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
மேர்சி லங்கா நிறுவனம் மற்றும் குவைத் லஜன்னத்துஸ் சனாபில் அல் கைரியா நிறுவனம் என்பவற்றின் அனுசரணையுடன் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபையும் ஜமாத்துஸ் சலாமா அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்நிகழ்வு சாய்ந்தமருது மாளிகைக்காடு ஜம்மியத்துல் உலமா சபையின் தலைவர் சட்டத்தரணி என்.எம்.அப்துல் முஜீப் (நளீமி) தலைமையில்
நடைபெற்றது.
இதில் குவைத்தில் இருந்து வருகை தந்திருந்த மேர்சி லங்கா நிறுவனத்தின் பணிப்பாளர் ஒஸ்தாத் நஸ்ர் ஹஸன் கலீல் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார். அத்துடன் மேர்சி லங்கா நிறுவனத்தின் திட்டமிடல் முகாமையாளர் அஷ்ஷெய்க் எம்.ஆர்.எம்.முனாஸ் (நளீமி) அவர்கள் “கற்றுக் கொள்ளலும் பற்றுக் கொள்ளலும்” எனும் தலைப்பில் விசேட சொற்பொழிவு நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் மேர்சி லங்கா நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் அஷ்சேக் ஹஸன் சியாத் (நளீமி), அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைத் தலைவர் எஸ்.எச்.ஆதம்பாவா மௌலவி மற்றும் உலமாக்கள், புத்திஜீவிகள், கல்விமான்கள், அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் கலந்து கொண்டிருந்த அனைவருக்கும் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் ஸீரா தொடர்பான நூல்கள் அடங்கிய பொதிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டன.