Advertisement

Main Ad

சுயஇன்பம் மூலம் இச்சையைத் தனிக்கலாமா?

ஒரு ஆண், பெண் துணையின்றி, ஒரு பெண், ஆண் துணையின்றி வேறு வழிகளில் தங்களின் இச்சையைத் தணிக்கக் கூடாது. திருமணம் செய்ய வசதியற்ற சூழ்நிலையில் உள்ள பலர் தங்களின் இச்சைகளை தணித்துக் கொள்வதில் முயலும் வழிகளில் சுய இன்பமும் ஒன்று.  அல்லாஹ் கூறுகிறான்:  மேலும் அவர்கள் தங்களுடைய வெட்க தளங்களைக் காத்துக் கொள்வார்கள்'  ஆனால், அவர்கள் தங்கள் மனைவிகளிடமோ, அல்லது தங்கள் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களிடமோ தவிர (இவர்களிடம் உறவு கொள்வது கொண்டு ) நிச்சயமாக அவர்கள் பலிவாங்கபடமாட்டார்கள்.  ஆனால், இதற்க்கு அப்பால் (வேறு வழிகளில் ) எவர் நாடுகிறாரோ, அத்தகையவர்கள் தாம் வரம்பு மீறியவர்களாவார்கள். (அல்குரான் : 23-5,6,7,)  திருமணம் மூலமே தவிர வேறு வழிகளில் தங்களின் இச்சைகளை தனித்துக் கொள்ள கூடாது என்றும், மீறி நடப்போர் வரம் மீறியவர்கள் என்றும் இவ்வசனம் தெளிவுபடக் கூறுகிறது எனவே சுய இன்பம் கூடவே கூடாது.
 
 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.
 வாலிபர்களே ! உங்களில் எவருக்கேனும் (திருமணம் செய்ய ) வசதி இருந்தால் அவர் திருமணம் செய்யட்டும். அது (தவறான வழிகளை விட்டும் ) பார்வையைத் தடுக்கும். திருமணம் செய்ய வசதி இல்லை என்றால் அவர் நோன்பு வைக்கட்டும். அது (தவறு செய்வதில் இருந்து) அவரை தடுக்கும்.  அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊது (ரலி) நூல் : புகாரி.  திருமணம் செய்ய வசதியற்றவர்கள் தங்கள் ஆசையை கட்டுப்படுத்த நோன்பு வைப்பது தான் சிறந்த வழி என்று நபி(ஸல்) அவர்கள் கூறுவதால் சுய இன்பம் போன்ற பழக்கத்தை எந்த ஆணும், பெண்ணும் மேற்கொள்ள கூடாது. -