Advertisement

Main Ad

கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


கா.பொ.த (சா/த) பரீட்சைக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்2014 ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்றுமுதல் ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதியுடன் நிறைவடையும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்த வர்த்தமானி அறிவித்தல் இன்று வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் டிசம்பர் மாதம் 09 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.