Advertisement

Main Ad

சவுதியில், டிரைவர் அனஸ் மீது முதலாளி மகன் வெறித்தனமாக துப்பாக்கி சூடு. ( மனநல பாதிப்புக்குள்ளானவனாம்)

Untitled


இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் அனஸ் புடுவிலிகல்வி(24). சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் கார் டிரைவராக வேலை செய்வதற்காக கடந்த வாரம் இங்கு வந்தார்.

நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) முதலாளியின் குடும்பத்தாருடன் தாயிப் நகருக்கு சென்று விட்டு அன்றிரவு மக்கா நகருக்கு திரும்பிய அனஸ் புடுவிலிகல்வியை நோக்கி அவரது முதலாளியின் மகன் வெறித்தனமாக துப்பாக்கியால் சுட்டார்.

குண்டுகள் பாய்ந்த நிலையில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சுருண்டு விழுந்த அவரை ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் தொடர்பாக 20 வயது மதிக்கத்தக்க வாலிபரை கைது செய்த சவூதி போலீசார், குற்றவாளி மனநல பாதிப்புக்குள்ளானவன் என்று தெரிவித்துள்ளனர்.
indo asian news servise : தமிழாக்கம் முத்துபேட்நிவ்ஸ்