குறிப்பாக காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வரை உயர்வடைவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, வடக்கு கிழக்கு மலையகம் உள்ளிட்ட நாட்டின் அநேகமான பகுதிகளில் மழை பெய்துவருகின்றது.
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மழை பெய்துவருவதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறினார்.
அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் தொடர்ந்தும் மழை பெய்துவருகின்றது
