Advertisement

Main Ad

ஐ.பி.எல். சீசன் 7 : டெல்லி அணியை வீழ்த்தியது சென்னை



.பி.எல். சீசன் 7 : .பி.எல். சீசன் 7-ல் டெல்லி மற்றும் சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டியில் சென்னை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது. முன்னதாக டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
 இதனை அடுத்து களமிறங்கிய டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை  இழந்து 178 ஓட்டங்களை எடுத்தது. டெல்லி அணியில் திணேஷ் கார்த்திக் 36 பந்துகளில் 4 பவுண்டரி, 3 சிக்சர் உள்பட 51 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனை அடுத்து 179 ஓட்டங்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 19.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சென்னை அணியில் அபாரமாக விளையாடிய வேய்ன்ஸ்மித் அரைசதம் அடித்து அசத்தினார். வேய்ன்ஸ்மித் 51 பந்துகளில் 4 பவுண்டரி, 8 சிக்சர், உள்பட 79ஓட்டங்கள்  எடுத்து  ஆட்டமிழந்தார். இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளி பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.