Advertisement

Main Ad

மத்திய முகாமில் உணவு நஞ்சானதில் 55 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

மத்தியமுகாம், 4ம் கொலனியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது பரிமாறப்பட்ட உணவு நஞ்சானதில் சுமார் 55 பேர் கல்முனை வடக்கு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் பரிமாறப்பட்ட ஐஸ் கிரீம்மை உண்டதன் பின்னரே தாங்கள் இவ்வாறான உபாதைக்கு உட்பட்டதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்தனர்.
நேற்று (03) மாலை 6.50 மணிமுதல் 9.30 மணிவரையும் பாதிக்கப்பட்ட நேயாளர்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டதாகவும் இதில் 18 சிறுவர்களும் 37க்கு மேற்பட்ட பெரியவர்களுமாக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியதாதிகள் வேலை நிறுத்த போராட்டத்தில் இருக்கின்ற போதிலும் சில தாதிகள் முன்வந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்கியதாக கல்முனை வடக்கு வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்தார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.