கல்முனை ஹட்டன்
நேஷனல் வங்கியின் வங்கி நடவடிக்கைகளை பிற்பகல் 3.30 மணிக்கு இடை நிறுத்தி வங்கியை மூடியதன் பின்னர் கணக்குகளை
சரி பார்கின்ற நேரத்தில் வங்கி அதிகாரிகளால் 5000 போலிநோட்டுக்கள் இரண்டு கண்டு பிடிக்கப் பட்டுள்ளன .
போலி நோட்டு
கிடைக்கப் பெற்ற காசாளர் வங்கி முகாமையாளரின்
கவனத்துக்கு உடனடியாக கொண்டுவந்ததையடுத்து இரண்டு 5000 ரூபா போலி நோட்டுக்களும் கல்முனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப் பட்டுள்ளன. கல்முனை பொலிசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை
மேற்கொண்டுள்ளனர்.
வங்கிகளில் இடம்
பெற்றுவரும் கொள்ளை சம்பவங்கள் மற்றும் போலி நாணய விடயங்கள் தொடர்பாக கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் சமீபத்தில் கல்முனையில் உள்ள 15 க்கும் மேற்பட்ட வங்கிகள் , நிதி நிறுவனங்களின் தலைவர்களுக்கு தெளிவூட்டல் நிகழ்வொன்றும் இடம் பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.
தற்போது
நாட்டின் பல பகுதிகளிலும் போலி நாணயத்தாளின் புழக்கம் அதிகரித்துள்ளமையால்
பொதுமக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு கல்முனை பொலிஸார் அறிவுறுத்தல்கள்
வழங்கியுள்ளார்கள்.

