தமிழில் மட்டுமே 100 தியேட்டர்களில் அங்கு திரையிடப்படுகிறது. மற்ற தியேட்டர்களில் ஆங்கிலத்தில் ரிலீஸ் செய்கின்றனர். அங்கு ரஜினியின் ‘எந்திரன்’ படம் 85 திரையரங்குகளில்தான் வெளியானது. விஜய்யின் ஜில்லா, அஜீத்தின் வீரம் படங்கள் தலா 70 தியேட்டர்களில் திரையிடப்பட்டன. கூடுதல் திரையரங்குகளில் கோச்சடையான் வெளியாவது சாதனையாக கருதப்படுகிறது.
கோச்சடையான் படத்தை 3டி–யில் எடுத்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டும் 80 தியேட்டர்களில் 3டி தொழில் நுட்பத்தில் வெளியாகிறது. வேறு எந்த 3டி படமும் இவ்வளவு தியேட்டர்களில் திரையிடப்பட்டது இல்லை. தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்பட 6 மொழிகளில் கோச்சடையான் வருகிறது. ‘மோஷன் கேப்சரிங் டெக்னாலஜி’ தொழில்நுட்பத்தில் இதை எடுத்துள்ளனர். இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார்.
கோச்சடையான் ரிலீசை விழாவாக கொண்டாட ரசிகர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். தியேட்டர்களில் ரஜினி கட்–அவுட், கொடி தோரணங்கள் அமைத்து வருகிறார்கள்.
