Advertisement

Main Ad

எய்ட்ஸ் நோயைப் பரப்பிய தாதிக்கு 3 ஆண்டு சிறை


எய்ட்ஸ் நோயைப் பரப்பிய தாதிக்கு 3 ஆண்டு சிறைஉகாண்டா நாட்டில் எய்ட்ஸ் நோயைப் பரப்பிய தாதி ஒருவருக்கு 3 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
உகாண்டாவைச் சேர்ந்தவர் ரோஸ்மேரி நமுபிரு (64). இவர் ஒரு மருத்துவமனையில் தாதியாகப் பணிபுரிந்தார்.
எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், இரண்டு வயதுக் குழந்தைக்கு ஊசி போடுவதற்கு முன்னர் அதனைத் தனது உடலில் குத்திவிட்டுக் குழந்தைக்குப் போட்டுள்ளார்.
இது பெற்றோருக்குத் தெரியவந்துள்ளது. உடனே அவர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

எய்ட்ஸ் நோயைப் பரப்பும் நோக்கில் அவர் இவ்வாறு நடந்துகொண்டது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், எய்ட்ஸ் நோயைப் பரப்பியதாகக் கூறி ரோஸ்மேரிக்கு 3 ஆண்டு சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.