Advertisement

Main Ad

ஆப்கானிஸ்தானில் மண்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 350 பேர் உயிரிழப்பு



ஆப்கானிஸ்தானில் மண்சரிவில் சிக்கி குறைந்தபட்சம் 350 பேர் உயிரிழப்புஆப்கானிஸ்தானில் மண்சரிவில் சிக்கி குறைந்த பட்சம் 350 பேர் உயிரிழந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.
நாட்டின் வடகிழக்குப் பிராந்தியத்திலுள்ள படக் ஷான் மாகாணத்தில் இந்த மண்சரிவு அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானவர்கள் மண்சரிவு மற்றும் பாறைகளுக்குள் சிக்கியுள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என ஆப்கானிலுள்ள ஐ.நா அலுவலகம் கூறியுள்ளது.
கடும் மழையை அடுத்து மலையொன்றின் பகுதி இடிந்து வீழ்ந்தில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் மீட்புப் பணியாளர்கள் குறித்த பகுதிக்கு விரைந்துள்ளனர்.
அண்மைக்காலமாக ஆப்கானின் வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களில் கடும் மழை பெய்து வருவதுடன் வெள்ளம் காரணமாக இதுவரை சுமார் 150 பேர் உயிரழந்துள்ளனர்.
அத்துடன் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் உயிரிழந்தவர்கள் உடனடியாக அடக்கம் செய்யப்பட்டதாக அந்த நாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.