Advertisement

Main Ad

மும்பை,
காதலியை மிரட்டி நண்பர்கள் 2 பேருக்கு காதலன் விருந்தாக்கினார். 3 பேரும் சேர்ந்து கற்பழித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
இது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
காணாமல் போன பெண்
மும்பை சாந்தாகுருஸ் மேற்கு கஜ்தர்பாந்த் சம்பு தெருவில் வசித்து வருபவர் உமேஷ் (வயது19). தனியார் நிறுவன ஊழியர். இவரும் பக்கத்து வீட்டில் வசிக்கும் 16 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் பெண்ணின் பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து பெற்றோர் அந்த பெண்ணை கண்டித்து வீட்டில் அடைத்து வைத்தனர்.
இந்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை அந்த பெண் மாயமானார். இதுபற்றி அவரது பெற்றோர், சாந்தாகுரூஸ் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கற்பழித்த 3 பேர் கைது
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காணாமல் போன அந்த இளம் பெண் அவரது வீட்டு அருகில் காயத்துடன் ஆடைகள் கிழிந்த நிலையில் அலங்கோலமாக கிடந்ததை கண்ட பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து தனது மகளை அழைத்து கொண்டு சிகிச்சைக்காக பாபா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது பற்றி தகவல் அறிந்த போலீசார் மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனின் காதலன் உமேஷ் காதலியை மிரட்டி நண்பர்கள் இருவருக்கு விருந்தாக்கி உள்ளார். அதன்படி உமேஷ், அவரது நண்பர்கள் பிரசாத் (20), கோரிலால் வர்மா (28) ஆகிய 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கற்பழித்துள்ளனர். இது தொடர்பாக 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
7 நாட்கள் போலீஸ் காவல்
அவர்களிடம் நடத்திய விசாரணையில் சம்பவத்தன்று பெண்ணை கடத்தி சென்று நண்பரின் வீட்டில் அடைத்து வைத்திருக்கிறார்கள். பின்னர் காதலன் உமேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து அப்பெண்ணை மிரட்டி மாறி மாறி கற்பழித்தாகவும், பின்னர் 2 நாட்கள் கழித்து பெண்ணை வெளியே விரட்டி அடித்ததாகவும் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கைது செய்யப்பட்ட 3 பேரையும் பாந்திரா கோர்ட்டில் ஆஜர்படுத்தி 7 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.