Advertisement

Main Ad

10 வருடங்களைக் கடந்தும் எந்த ஒரு வரவேற்பு வாசகமும் எழுதப்படாத சாய்ந்தமருதில் அமைக்கப்பட்டுள்ள வரவேற்பு தோரணம் !


சாய்ந்தமருது – மாளிகைக்காடு  எல்லையிலுள்ள நுழை வாயிலில் பல இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்டு திறந்து  வைக்கப்பட்டிருக்கும்வரவேற்பு தோரணம் அதில் எந்த ஒரு வாசகமும் எழுதப்படாமல் அப்படியே 10 வருடங்களாக எதுவித தீர்வும் இன்றி விடப்பட்டிருப்பது குறித்து இப்பிரதேச புத்திஜீவிகள் கவலை வெளியிட்டுள்ளனர்.
    இவ் வரவேற்புத் தோரணத்தில் ஒரு சாரார்   கல்முனை மாநகர சபை உங்களை அன்புடன் வரவேற்கின்றது எனவும் மற்றும் ஒரு சாரார்  சாய்ந்தமருது உங்களை அன்புடன் வரவேற்கின்றதுஎன்றும் மற்றொரு சாரார் “ சாய்ந்தமருது உங்களை அன்புடன் வரவேற்கின்றது – கல்முனை மாநகர சபை “  என எழுத வேண்டும் என்று பல கருத்துக்களை வெளியிட்டு முரன்பட்டுக் கொண்டதை அடுத்து வரவேற்பு தோரணம் (மக்களின் பணத்தில் பல இலட்சம் ரூபா செலவிடப்பட்டு) எதற்காக அமைக்கப்பட்டு இருக்கின்றதோ அந்த நோக்கம் இவ் வரவேற்பு தோரணத்தில் நிறைவேற்றப்படாமல் அப்படியே இன்று வரையும் வெறுமனே விடப்பட்டிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
    சாய்ந்தமருதிலுள்ள இவ் வரவேற்பு தோரணம் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் அவர்களின் அழைப்பின் பேரில் கடந்த 2003 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும் நீதி அமைச்சருமான அல்-ஹாஜ் ரவூப் ஹக்கீம் அவர்களால் திறந்து வைக்கப்பட்டது. இவர் அக்காலத்தில் துறைமுகங்கள் அபிவிருத்தி கப்பல்துறை, கிழக்கு அபிவிருத்தி மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சராகப் பதவி வகித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    எது எப்படி இருப்பினும் வரவேற்பு தோரணத்தை அழகுபடுத்தி வரவேற்பு வாசகத்தை எழுதும்  சரியான முடிவை கல்முனை மாநகர சபையின் புதிய  மேயர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் அவர்கள் தைரியத்துடன் எடுக்க வேண்டும் என்ற வேண்டுகோள் இப்பிரதேச மக்களால் விடுக்கப்படுகின்றது.