இதனால் மூச்சு திணறல் ஏற்படுகிறது.
இவர்களின் சுவாசப் பாதையால் சிறிய அளவிலான மாசுபாடைக் கூட பொறுத்துக்கொள்ள
முடியாது. ஆஸ்துமா நோய் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, மே
மாதத்தின் முதல் செவ்வாய் உலக ஆஸ்துமா தினமாக (மே 6ம் திகதி)
கடைப்பிடிக்கப்படுகிறது.
"உங்கள் ஆஸ்துமாவை, உங்களால் தடுக்க முடியும்´ என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக்கருத்து. 1998ல் இத்தினம் தொடங்கப்பட்டது.
காற்றில் இருக்கும் புகை, மாசு மற்றும் சில வகை உணவுகள் கூட ஆஸ்துமா பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒவ்வாமையாக மாறும் என கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்துமா நோயாளிகள் அதற்கான மருந்துகளை தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். சிலருக்கு உடற்பயிற்சியில் ஈடுபடுவது கூட ஒவ்வாமை ஏற்படுத்தும். தும்மல், இருமல், சுவாசித்தலில் ஏற்படும் சிரமம் ஆஸ்துமாவின் அறிகுறிகள். இவை இருந்தால், முன்னரே கண்டறிந்து சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம்.
இதில் ஏற்படும் தாமதம் நுரையீரலை சேதப்படுத்திவிடும். சுற்றுச்சூழல் சீர்கேடுதான் ஆஸ்துமாவுக்கு பெரிதும் காரணம்.
ஆஸ்துமாவுக்கு இப்போது இன்ஹேலர்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. இது நுகரப்படுவதால் மருந்து நேரடியாக சுவாசப் பாதைக்கு சென்று சீர் செய்கிறது. 2025ல் உலகில் 40 கோடி பேர் ஆஸ்துமாவால் பாதிக்கப்படுவர் என கணிக்கப்பட்டுள்ளது.
உலகில் 25 பேரில் ஒருவர் ஆஸ்துமாவினால் இறக்கிறார். அதில் 90 சதவீத மரணங்கள் தவிர்க்க கூடியவை. விழிப்புணர்வு இல்லாததும், முறையான சிகிச்சை எடுக்காததும் மரணத்தை ஏற்படுத்துகிறது.
சிறுவயதில் ஏற்படும் ஆஸ்துமாவுக்கு சூரிய ஒளியை அரிய மருந்தாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதிலிருந்து வைட்டமின் டி கிடைக்கிறது.