சைப்ரஸ், இத்தாலி, ஹொங்கொங், போன்ற நாடுகளுக்கு வீட்டுப் பணிப்பெண்களை அனுப்புவதற்கான வாய்ப்புக்கள் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொது முகாமையளாளர் மங்கள ரன்தெனிய தெரிவித்தார்.
நேர்முகத் தேர்வுகள் தொடர்பில் அறிந்துகொள்வதற்கு பணியகத்தால் புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
077 314 89 27 மற்றும் 077 398 33 36 ஆகிய இலங்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இதுவரை வெளிநாடுகளில் தொழில்புரிகின்ற அல்லது வேறு இடங்களில் தொழில்புரிந்து அனுபவமுள்ள இலங்கைப் பணியளாளர்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என்று பணியகத்தின் பிரதிப் பொதுமுகாமையாளர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்திருக்கின்ற பயிற்சியாளர்களின் பயிற்சிகளை அடுத்து, தெரிவு செய்யப்படுகின்றவர்களுக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்லக்கூடிய வாய்ப்பு கிடைப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
