ஒரு கூட்டத்தினருக்கு உரையாற்றுவதற்காக மஹியங்கனை பிரதேச சபைக்கு ஜாதிக பல
சேனா தலைவர் வட்டரெக விஜித தேரர் வருகை தந்தபோது, பிரதேச சபைக்கு வெளியில்
மற்றுமொரு குழுவினர் ஆர்பாட்டம் செய்ததால் இன்று செவ்வாய்க்கிழமை (22)
காலை அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.
இந்நிலையில், தேரர் அமர்வில் கலந்துகொண்ட பின்னர் அவசரமாக வளாகத்தை விட்டுச் சென்ருள்ளதாக தெரிய வருகிறது.
வட்டரெக விஜித தேரர் வருகை தந்தபோதும் , பிரதேச சபைக்கு வெளியில் குழுவினர் ஆர்பாட்டம் செய்த போதும் எடுக்கப்பட்ட படங்கள்.





